திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் கரூர் கே.சி. பழனிசாமி, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், குத்தாலம் கல்யாணம், மதுரை பொன்முது்து ராமலிங்கம் , தேனிமூக்கையா மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் ஆயத்த பணிகள் மற்றும் திமுக பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் விவரம் வருமாறு:
தமிழ்நாட்டை மேம்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது.
மத்திய பாஜக அரசின், மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரசியல் சட்ட விரோத செயல்பாடுகளை கண்டிப்பது.
மீனவர்களின் நலன்களை மத்திய அரசு காக்க வேண்டும் . இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 18 மாதங்களாக பற்றியெரியும் மணிப்பூரை காக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.
மத்திய வருவாயில் மாநில அரசுகளுக்கு 50% நிதி பகிர்வை அளித்து நிதி உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என தீர்மானம்.
‘சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவோம்’ என கழக உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.