தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் சாதனை மலரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த சாதனை மலரை வெளியிட்ட பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இரண்டு ஆண்டுகளை முடித்துவிட்டு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எட்டு கோடி மக்களும் நன்மை அடையும் ஆட்சியாக திமுக அரசு அமைந்துள்ளது. திமுக ஆட்சி சிலரால் விமர்சிக்கப்படும் அதே நேரத்தில், பலரால் விரும்பப்படுகிறது. திமுக ஆட்சி முகம் அதிகாரமல்ல, அன்பு; ஆணவமில்லை, ஜனநாயகம் ஆகியவையே. திராவிட மாடல் என்ன என கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வது திராவிட மாடல். ஓய்வின்றி பணியாற்றுகிறேன்; சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன். சிறு வயது முதலே திராவிட இயக்கத்திற்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.