திமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 3500 பேர் இதில் கலந்து கொள்வார்கள். எனவே தனியார் மண்டபம் அல்லது பொது இடத்தில் பந்தல் அமைத்து தான் நடத்த வேண்டும். இதற்கு முன் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
2026ல் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் வரும் 2025 ஜனவரியில் திமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. திருச்சி அல்லது மதுரையில் தனியார் அரங்கு அல்லது பொது மைதானங்களை தேர்வு செய்து நடத்துவது குறித்து திமுக உயர்மட்ட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.