கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி கரூர் பைபாஸ் சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடி மரத்தில் திமுக கொடியை பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இன்று ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதராஜ், மாநகர திமுக செயலாளர் மதிவாணன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள்
கே என் சேகரன், சபியுல்லா, மாவட்டக் அவைத் தலைவர் கோவிந்தராஜ் ,மாவட்ட பொருளாளர் குணசேகரன் பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் ,அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்