வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று திமுக எம்.பியும், மக்களவை திமுக கொறடாவுமான ஆ. ராசா இன்று வக்பு சடட திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். இந்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் என அதில் கூறி உள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பாக காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளது.