தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வரும் தொழிலதிபர்களின் குவாரிகள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மணல் குவாரி ஒப்பந்தக்காரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் ரெத்தினம் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் ரெத்தினத்தின் நெருங்கிய உறவினரான தொழிலதிபர் கரிகாலன் வீட்டில் செப்டம்பர் 13ம் தேதி 5 பேர் கொண்ட அமலாக்க துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்று 3 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் 2வது முறையாக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசாருடன் கறம்பக்குடி குழந்திரான்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மணல் குவாரி ஒப்பந்தக்காரர் கரிகாலன் வீட்டில் காலை முதல் அமலாக்கதுறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.