Skip to content

இந்தி திணிப்பை கண்டித்து.. திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

மத்திய அரசு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை வழங்குவோம் என்றும் , இந்தி மொழியை கட்டாய மொழியாக வேண்டும் என்று தமிழக அரசை கட்டாயப்படுத்தி வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளரும், மண்டல குழு தலைவருமான மதிவாணன் தலைமையில் பொதுமக்களிடையே தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து, பொன்மலை பகுதி கல்கண்டார் கோட்டை கடைவீதி மற்றும் அரியமங்கலம் பகுதி பேருந்து நிலையம், மற்றும் கடைவீத ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது அப்பொழுது ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது. இந்நிகழ்வில் பொன்மலை பகுதி கழக செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார் மாநகரப் பொருளாளர் தமிழ்ச்செல்வன் மாநகர துணை செயலாளர் பொன் செல்லையா ,சந்திரமோகன் அணிகளின் அமைப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!