தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து திமுக பணிகளை தொடங்கி உள்ளது.
இதன் ஒரு கட்டமாக திமுக மாவட்ட செயலாளர்களில் பலரை அதிரடியாக மாற்ற திமுக முடிவு செய்துள்ளது. பல மாவட்டங்களில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்கவும் திட்டமிட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் என்ற பதவி வழங்கப்படும். சட்டமன்ற தேர்தல் முடியும் வரை புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் பதவியில் நீடிப்பார்கள். அதன் பிறகு உள்கட்சி தேர்தல் நடத்தி மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது.