Skip to content

கவர்னரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னர் ரவி  தொடர்ந்து ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். கடந்த  2 ஆண்டுகளில்  வெட்டியும்,  ஒட்டியும் பேசினார்.  இந்த ஆண்டு   எதையும் வாசிக்காமல்  சென்று விட்டார். கவர்னரின் இந்த செயலுக்கு திமுக ,  காங்கிரஸ்,  இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

கவர்னரின் இந்த செயலை கண்டித்து  முதல்வர் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கவர்னர் தமிழகத்தையும்,  தமிழ் மக்களையும், பேரவையையும்  அவமதித்து விட்டார் என கூறி இருந்தார்.

இந்த நிலையில்  தமிழகத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதிக்கும் கவர்னர் ரவியை கண்டித்து நாளை தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக  ஆர்ப்பாட்டம்  நடத்தும் என திமுக அறிவித்து உள்ளது.  இதற்கான அறிவிப்பை  அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்து உள்ளார்.  காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள்,  மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கிறார்கள்.

error: Content is protected !!