நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ளதால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் திமுக ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க கோரிக்கையும் இன்று சென்னை வள்ளுவர் கோட்டகம் முன் திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடந்தது. மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் திமுக மாணவரணியினர் திரளாக கலந்து கொண்டனர். திணிக்காதே, திணிக்காதே என அவர்கள் கோஷம் போட்டனர். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி , ராஜீவ்காந்தி, பூச்சிமுருகன் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.