மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வரும் 19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு அளிக்க இருக்கிறது. திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 19ம் தேதி முதல் விருப்ப மனு விண்ணப்பம் பெற்று போட்டியிட விரும்பும் தொகுதி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து மார்ச் 1ம் தேதி முதல் 7ம் தேதிக்குள் அறிவாலயத்தில் வழங்கலாம். போட்டியிட விரும்புவோர் ரூ.50 ஆயிரம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த தகவலை திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.