சேலத்தில்24ம் தேதி நடக்கும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடுக்கு திருப்பூரில் 4 லட்சம் டி-சர்ட்கள் தயாராகியுள்ளது. 1980ம் ஆண்டு இந்த அணி தொடங்கப்பட்டாலும், கடந்த 2007ம் ஆண்டு தான் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்றது.
அதைதொடர்ந்து, 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் 24ம் தேதி திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சேலத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்த தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துவருகிறார்.
மாநாட்டுக்கு இளைூா் அணியை திரளாக புங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி திருப்பூரில் நடந்த இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய உதயநிதி ஸ்டாலின், பணியன் நகரமான திருப்பூருக்கு சேலத்தில் நடைபெறும் மாநாடில் பங்கேற்கும் இளைஞரணி தொண்டர்களுக்கு வழங்க 4 லட்சம் டி-சர்ட் ஆடர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி திருப்பூரில் உள்ள நான்கு பின்னலாடை நிறுவனங்களுக்கு திமுக இளைஞரணி மாநாட்டு டி-ஷர்ட்டுகள் ஆடர் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தலா ஒரு லட்சம் டி-ஷர்ட்கள் வீதம் 4 லட்சம் டி-ஷர்ட்களை தயாரித்து வழங்கியுள்ளது. இதற்காக கடந்த 15 நாட்களாக 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
டி-ஷர்ட்டுகள் சிறியது, நடுத்தரம், பெரியது என அணைத்து விதமான அளவுகளிலும் மிகத் தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. டி-ஷர்ட்டுகளின் முன் பகுதியில் கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் படங்களும், பின்பகுதியில் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு 2023, மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளது.
தற்பொழுது தயார் செய்யப்பட்டுள்ள டி-ஷர்ட்டுகள் அனைத்தும், மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மாநாடு நடைபெறும் நாளில் இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இந்த டி-ஷர்ட்டுகள் அணிந்து மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.