மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளரும் – விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி,கழக துணைப் பொது செயலாளர் ஆ. ராசா ஆகியோரைப்பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த “நவரசம்’ கலைக்குழு,மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஷியாளா தேவியிடம், மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் முன்னிலையில், பெரம்பலூர்
மாவட்ட மகளிர் அணி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பில், புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்,மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், தலைவர் தமிழரசி,
மாவட்ட மகளிர் அணி தலைவர் பாத்திமா, துணை தலைவர் தனலெட்சுமி, அங்கையற்கண்ணி,
விஜிபுளோரா ரெஜி, செல்வராணி, சங்கீதா,முருகேஸ்வரி, சாந்தி,
கண்ணகி, நட்சத்திரம், மலர்விழி, நகர் மன்ற உறுப்பினர்கள் சித்ரா,ஷாலினி, பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன் மற்றும் முத்தலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.