விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததால் அந்த தொகுதியில் ஜூலை 10ம் தேதி் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இன்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா காலை 11.12 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட வழங்கல் அதிகாரி சந்திரசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தாலுகா அலுவலகம் தேர்தல் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
அப்போது அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி ஜெகத் ரட்சகன், விசிக எம்.பி. ரவிக்குமார், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர். வேட்புமனு தாக்கல் வரும் 21ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கலையொட்டி விக்கிரவாண்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.