தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடு பட வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கழக நிர்வாகிகள் அனைவரும் முழு அர்ப்பனிப்போடு செயல்பட்டு வெற்றிக்காக பாடு பட வேண்டும் என்று தி.மு.க.துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா ஆலோசனை கூறினார். இதில் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன்,மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி. இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், செ.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன்,அழகு.நீலமேகம், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன்,
ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர்,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
