வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இ்ந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையின் இறுதியில் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இது தொடர்பான ஒப்பந்தத்தில் தானும் திமுகவின் தலைவர் மு.க ஸ்டாலினும் கையெழுத்திட்டதாகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறினார். மேலும் ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்பி நவாஸ் கனியே மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.. அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு தேசிய மக்கள் கழகத்தின் நிர்வாகிகள் ஈஸ்வரன் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் இறுதியில் மீண்டும் கொதேமகவிற்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறினார். இந்த நிலையில் கடந்த தேர்தல் போலவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏணி சின்னத்திலும், கொதேமக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது..