புதுக்கோட்டை மாநகராட்சி 39வதுவார்டு பொன்னம்பட்டிபகுதியில் உள்ள ஓட்டக்குளம் என்ற இடத்தில் உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ்
தூர்வாரும் பணியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,துணைமேயர்எம்.லியாகத்தலி,மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,
ஒன்றிய திமுக செயலாளர் மு.க.ராமகிருஷ்ணன், மாநகராட்சி உறுப்பினர் பெ.ராஜேஸ்வரி, வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மதியழகன் , புதுக்கோட்டை மாநகர பொறுப்பாளர் ராஜேஷ்,மற்றும்
எம்.எம்..பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:
உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததுமே முதல்வர் ஸ்டாலின், பல்கலைக்கழக வேந்தர் ஆகி விட்டார். தீர்ப்பு வந்ததும் மத்திய அரசு அவரை நீக்கியிருக்க வேண்டும், அல்லது ராஜினாமா செய்திருக்க வேண்டும். கவர்னா் பதவியில் நீடிக்க விரும்பினால் நீடிக்கலாம்.பாமக திமுக கூட்டணிக்கு வருமா என்று கேட்கிறீர்கள். தற்போது கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை கூட நாங்கள் இழக்க தயாராக இல்லை. அவர்கள் அனைவரும் விரும்பினால், சேர்ப்பது அப்போதைய சூழ்நிலையை பொறுத்தது. எங்கள் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. உடைக்க நினைத்தால் அவர்கள் உடைந்து போவார்கள். இதுவரை இந்தியாவில் எந்த கட்சியும் இப்படி ஒரு கூ்டணியை அமைத்ததில்லை.
இவ்வாற அவர் கூறினார்.