திருநெல்வேலி தொகுதி திமுக எம்பி ஞான திரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்துவ திருச்சபை உறுப்பினர்கள், நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திமுக எம்பி ஞான திரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக மத போதகர் கார்பரே நோபல் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மோதலில் தாக்கப்பட்ட மதபோதகர் கார்பரே நோபல் அளித்த புகாரின் பெயரில், திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கட்சிக்கு களங்கம் விளைவித்த புகார் தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க திமுக எம்பி எம்பி ஞான திரவியத்திற்கு திமுக தலைமை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது.
விளக்கம் அளிக்க தவறினால் கட்சி விதிப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திமுக தலைமை எச்சரித்துள்ளது. திமுக எம்பி ஞான திரவியம் திருநெல்வேலி கிருஸ்தவ திருமண்டல திருச்சபையில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், அங்கு அவரது ஆதரவாளர்கள், திருச்சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதல் தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில், காவல்துறை மற்றும் கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.