மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்ட விரட்ட தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி பல்வேறு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலில் தேமுதிக மாநில துணை பொது செயலாளர் பார்த்தசாரதியின் 60 வயது பூர்த்தியையொட்டி திருக்கடையூர் கோவிலில் பார்த்தசாரதி – கற்பகம் தம்பதியினருக்கு சஷ்டியபூர்த்தி (60 கல்யாணம்) விழா நடைபெற்றது. இதனை ஒட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாநிலத் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கோவிலுக்கு வருகை புரிந்து விழாவில் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக கோவில் வாசலில் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கோவில் உள்பிரகாரத்தில் கஜபூஜை, கோ பூஜை செய்தும் கோவிலுக்கு உள்ளே சென்று கொடிமரத்தினை வணங்கி, கள்ளவர்ண விநாயகர், அமிர்தகரேஸ்வரர், காலசம்கார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று மனம் உருக வழிபாடு செய்தனர். இருவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிராசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாநிலத் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பார்த்தசாரதி தம்பதியினரை வாழ்த்தி பரிசு வழங்கினர். அப்போது பார்த்தசாரதியின் பேரக்குழந்தையை தூக்கி முத்தமிட்டு கொஞ்சினர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதை ஒருபோதும் தேமுதிக ஏற்று கொள்ளாது தமிழக அரசுடன் இணைந்து ஆதரவு தருவோம் என கூறினார். ராஜ்ய சபா எம்பி சீட்டுக்கு உறுதிமொழி அளிக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதை பற்றிய கேள்விக்கு பதிலலிக்காமல் நன்றி வணக்கம் என்று கூறி நழுவி சென்று விட்டார் :-
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதியின் 60 வயது பூர்த்தியையொட்டி நடைபெற்ற மணி விழாவில் கலந்து கொண்டு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழக அரசின் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது அதன்படி அதில் கலந்து கொண்டோம். கேப்டன் அவர்களின் கொள்கைப்படி அன்னை தமிழ் காப்போம் அனைத்து மொழிகளும் கற்போம் என்பதையே நாம் வலியுறுத்தினோம். நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளை குறைத்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது, தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக முழு ஆதரவை கொடுக்கும் என தெரிவித்தார். மேலும் தமிழக முழுவதும் தமிழ் மொழி கட்டாயமாக வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாக தெரிவித்தார். இன்றைய தமிழக பட்ஜெட் குறித்து முழுமையான தகவல் கிடைத்த பின் தலைமை கழகத்திலிருந்து அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். ராஜ்ய சபா எம்பி சீட்டுக்கு உறுதிமொழி அளிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதைப்பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலலிக்காமல் நன்றி வணக்கம் என்று கூறி நழுவி சென்று விட்டார்