சென்னையில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது… 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, முன்னிட்டு மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் தேர்தல்களுக்கான பணிகளை இப்போதை துவக்கிவிட்டோம். 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து இன்று முதல் பணிகளை துவங்கி இருக்கிறோம். அ.தி.மு.க.,வுடன் நட்புறவுடன் நாங்கள் தொடர்கிறோம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எங்களுடைய ஒற்றுமை, நட்புணர்வுடன் சிறப்பாக உள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் பல்வேறு துறை அரசு ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் அவர்கள் ஆர்பாட்டம் செய்ய அவசியம் இல்லை. அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். உண்மை நிலவரம் களத்தில் ஆர்பாட்டம் நடத்துபவர்களிடம் கேட்கும் போது தான் தெரிகிறது. விஜய் குறித்த நிலைப்பாடுகளை அவரிடம் தான் கேட்க வேண்டும். மாநாடு நடத்திய பிறகு விஜயை பொது வெளியில் யாரும் சந்திக்கவில்லை. நீங்கள் விஜயை செய்தியாளர்களை சந்திக்க வைத்து கேள்வி கேட்க வேண்டும். விஜயின் கட்சி கொள்கை, கூட்டணி வியூகங்கள் பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.
Tags:பிரேமலதா