மதுரையில் நேற்று தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது.. அரசியலில் யார் எதிரி என்று அறிந்து கொண்டு தான் அரசியல் களத்துக்குள் வருகிறார்கள். அந்த வகையில் விஜயும், தமது கருத்தை கூறி உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். வருங்காலம் நிறைய உள்ளது. அவர் கடந்து வரவேண்டிய பாதைகள் ஏராளம். எதிர்காலத்தில் அவரது செயல்பாடுகள், முன் எடுத்து செல்லும் நிகழ்வுகள் குறித்தே எதையும் கூறமுடியும். அப்போது நடிகர் விஜயின் த.வெ.க., பற்றியும், விஜயை சீமான் விமர்சித்தது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா, அவர்(சீமான்) திடீர் என்று அந்நியனாக மாறுவார், திடீர் என்று அம்பியாக மாறுவார். இதற்கு எல்லாம் நான் பதில் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது. ஏன் விஜயை தம்பி என்று சொன்னார், பின்னர் லாரியில் அடிபட்டு இறப்பார் என்று சொன்னார் என்று அவர்(சீமான்) தான் பதில் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்திருக்கார். அதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது இவ்வாறு பிரேமலதா கூறினார்.