விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டியை கொடுத்தார். இறுதி்யில் 4379 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் மனு செய்வோம் என்றும் கூறினார்.
அதன்படி வேட்பாளர் விஜயபிரபாகரன் இன்று டில்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி் மனு கொடுக்க இருக்கிறார்.