தேமுதிக கொடி நாள் வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கட்சிகொடி ஏற்றினார். உறுதி மொழியை பிரேமலதா விஜயகாந்த் வாசிக்க, கட்சி தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியில், தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி, விஜய பிரபாகரன், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிமுகவின் உட்கட்சி பிரச்னை தொடர்பான கருத்துக்களை கூற நான் விரும்பவில்லை. ஜெயக்குமார் ஒரு கருத்தும், செங்கோட்டையன் ஒரு கருத்தும் கூறுகிறார்கள். இதில் எது உண்மை, பொய் என்பதை அதிமுகவிடம்தான் கேட்க வேண்டும். 2026ல் தேமுதிக இருக்கும் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். முதல்வர் மருந்தகம் திட்டம் வரவேற்கத்தக்கது. விஜய் அரசியலில் எடுபடுவாரா? இல்லையா என்பதை நான் சொல்ல முடியாது. அவரின் செயல்பாடுகளை பொருத்துதான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.