தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் நடந்தது. பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அதிமுகவுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நமது கோரிக்கையில் எந்தவிதத்திலும் சமரசம் செய்யக்கூடாது என்றும். வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுக்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
2026 சட்டமன்ற தேர்தலையும் மனதில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினாராகளாம். 75சதவீதம் பேர் அதிமுக கூட்டணியைத்தான் ஆதரித்தார்களாம். ஒருசிலரே பாஜகவுடன் செல்வது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றார்களாம். இரு தரப்பு கருத்துக்களையும் பிரேமலதா கேட்டார். இறுதியில் கூட்டணியாருடன் என்பதை பிரேமலதாவே முடிவு செய்வார் என அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.