தஞ்சை மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வ உ சி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து ( 65 ) இவர் திக கட்சியின் திருவெறும்பூர் ஒன்றிய தலைவராக இருந்தார். மேலும் துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் நேற்று மாலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ராவுத்தான் மேடு அருகே சென்று திரும்பிய போது திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பின்னால் வந்த கார் மாரிமுத்து மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாரிமுத்து தலையில் பலத்த காயம் அடைந்ததோடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.