Skip to content

தீபாவளி சிறப்பு விற்பனை தொகுப்பு பட்டாசு கடை விற்பனை… கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அமராவதி-2 நியாயவிலைக் கடையில் கூட்டுறவுக் கொண்டாட்டம் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையினையும், கூட்டுறவு பட்டாசுக் கடை விற்பனையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி துவக்கி வைத்தார். மேலும், முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் மூலம் மளிகை பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு விற்பனை தொகுப்பினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விற்பனையை தொடங்கி வைத்தார்

இத்தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பில் அதிரசம் முறுக்கு தொகுப்பில் 5 வகையான மளிகைப் பொருட்கள் ரூ.190-க்கும். பிரீமியம் தொகுப்பில் 14 வகையான மளிகைப் பொருட்கள் ரூ.199-க்கும் மற்றும் எலைட் தொகுப்பில் 14 வகையான மளிகைப் பொருட்கள் ரூ.299-க்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்புகள் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும். எனவே, கூட்டுறவுத் துறையின், கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் விற்பனை செய்யப்படும் கூட்டுறவு கொண்டாட்டம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையினை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் சார்பில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளையும் வழங்கினார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 30,065 முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, காட்டுப்பிரிங்கியம், ஆண்டிமடம் மற்றும் உடையார்பாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கூட்டுறவு பட்டாசுக் கடைகளில் இன்று முதல் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் தரமான பட்டாசுகளை நியாயமான விலையில் பெற்று பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையினை கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், துணைப்பதிவாளர் (பொ.வி.தி) இளஞ்செல்வி, கூட்டுறவு சார்பதிவாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!