Skip to content

மனமுவந்து பிரிகிறோம் நீதிபதி முன் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி உறுதி

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி., பிரகாஷ் குமார். படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது காதல் மனைவி சைந்தவி.  2013ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ள நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகிறது.

தங்களுக்கு விவாகரத்து கோரி   இவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.  அந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாக  நீதிபதி முன் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்ட பின் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.

error: Content is protected !!