Skip to content
Home » வித்தியாசமான விவாகரத்து… ஸ்பெயின் கோர்ட் அதிரடி தீர்ப்பு

வித்தியாசமான விவாகரத்து… ஸ்பெயின் கோர்ட் அதிரடி தீர்ப்பு

உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு,?…..   என்ற வரிகளுடன் பழைய காலத்து எதிர்நீச்சல் படத்தில்  ஒரு பாடல் உண்டு.

இந்த பாடல் வரிகள் எல்லா காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. இன்றைக்கு தம்பதியர் பெரும்பாலானவர்கள்  ஏண்டா இவன கட்டிக்கிட்டேன், ஏண்டா இவகிட்ட மாட்டிக்கிட்டேன் என  குடும்பம் என்னும் உறவு சங்கிலியை உடைத்துக்கொண்டு போய்விடலாமா என்ற ஆதங்கத்துடன் தான் குடும்பம் நடத்துகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு குடும்ப வாழ்க்கையைத்தான்  ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இவானா என்ற பெண்ணும் நடத்தியிருப்பார் போல.  25 வருட இல்வாழ்க்கை வெள்ளிவிழா கொண்டாடும்படியாக இல்லாவிட்டாலும், பேர் சொல்லும் அளவுக்கு கூட இல்லை போல. எனவே வாழ்க்கை வெறுத்துபோன இவானா நீதிமன்றத்தை  நாடி விவாகரத்து கேட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

வீட்டு வேலைகளை செய்வதற்கு மட்டுமே இவர் என்னை திருமணம் செய்து கொண்டார். இவருடன் வாழ பிடிக்கவில்லை. எனக்கு விவாகரத்து வேண்டும் என்பது தான். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  விவாகரத்து வழங்கியதுடன், 25 வருடமாக அவர் தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்ததற்காக  இவானாவுக்கு ரூ.1.75 கோடி நிவாரணம் வழங்கும்படியும் உத்தரவு பிறப்பித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!