Skip to content
Home » தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு….27ம் தேதி தீர்ப்பு

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு….27ம் தேதி தீர்ப்பு

  • by Senthil

இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும்,  கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு லிங்கா , யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்கி வந்தார்.  இந்த நிலையில்  2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் தனுஷை சமாதானம் செய்யும் முயற்சிகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி இருந்தனர்.

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் நவ.3ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை.  இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு(இன்று) தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை ஐஸ்வர்யா முதலில் ஆஜரானார்.  தனுஷ் வரவில்லை என்பதால் வழக்கு விசாரணை 12 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போது தனுஷ் வந்தார்.  அதைத்தொடர்ந்து இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். கோாட்டின்  கதவுகள் மூடப்பட்டு  இருவரிடமும் நீதிபதி ரகசிய விசாரணை மேற்கொண்டார்.   சுமார் 10 நிமிடம் விசாரணை நடந்தது. இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக  தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து  வரும் 27ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என  நீதிபதி கூறினார். பின்னர் இருவரும் கோர்ட்டில் இருந்து தனித்தனியாக புறப்பட்டு சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!