அரியலூர் ரயில் நிலையத்தில் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, தெற்கு ரயில்வே துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மருத்துவத்துறை சார்பில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை தவிர்க்க வேண்டியதன் அவசியம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறை போலீசார் ரயில் பயணிகளுக்கு விளக்கினர். இதனையடுத்து அரியலூர் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. பின்னர் சென்னை நோக்கி சென்ற வைகை ரயிலில் பயணித்த பயணிகளுக்கும் மற்றும் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளுக்கும் புகையிலை ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.