அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி இணைய குற்றப்பிரிவு வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி அவர்களின் தலைமையில், இணைய குற்றப்பிரிவு காவல்துறையினர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள SBI Bank, Indian bank, HDFC bank, City Union bank, Karur vysya bank-களுக்கு சென்று, வங்கி மேலாளர், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இணையவழி குற்றங்கள் குறித்தும்,
அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மேலும் இவர்களுக்கு, இணைய வழி மூலம் ஏமாற்றப்பட்டு விட்டால், உடனடியாக புகாரை பதிவு செய்ய 1930 உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து அவர்களுக்கு இணைய குற்றம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் வங்கிகள் மற்றும் ATM மையங்களில் இணைய குற்றம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டது.