கோவையில் ஸ்ரீ ராமசாமி நாயுடு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற இதில்,கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை சேர்ந்த 120 பள்ளிகள் கலந்து கொண்டன. கோவை காந்திபுரம் சுகுணா ரிப் வி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளை, சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் தாளாளார் சுகுணா ஆகியோர் துவக்கி வைத்தனர்.முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு பேண்டு வாத்தியங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குனர் மற்றும் முதல்வர் ஆண்டனி,லீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.இதில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம்,மேட்டுப்பாளையம்,பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
போட்டியின் முதல் நாளில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவிகள் பந்தை லாவகமாக அடித்து விளையாடினர்.இது போன்ற போட்டிகள் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதோடு மாநில,தேசிய அளவில் கலந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் பள்ளி மாணவிகள் தெரிவித்தனர்.