திருச்சி, திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை தாகூர் தெருவை சேர்ந்தவர் லெனின் (21)அதே பகுதியை சேர்ந்தவர்கள் அரவிந்தன் ( 28), ஸ்ரீதர் (18) . இந்தநிலையில் ஸ்ரீதரின் மூத்த சகோதரி ஸ்ரீதேவி லெனின் வீட்டு அருகில் பட்டாசு வெடித்துள்ளார். இதனை பார்த்த லெனின் இங்கு வந்து ஏன் வெடி வெடிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். பின்னர் இது குறித்து ஸ்ரீதேவி தனது சகோதர் ஸ்ரீதரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் லெனின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். இதில் லெனின் மற்றும் அவரது சகோதரியையும் மரக்கட்டையால் தாக்கி மிரட்டி உள்ளார். இச்சம்பவம் குறித்து லெனின் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்தன்,ஸ்ரீதர் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். லெனின் படுகாயத்துடன் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போன்று ஸ்ரீதரின் தாய் கலா என்பவர் கொடுத்த புகாரில் தன்னை லெனின் தாக்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து லெனின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சியில் பட்டாசு வெடித்ததில் தகராறு… 2 பேருக்கு காயம்.. 2 பேர் கைது..
- by Authour
