விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்துக்கு ‘எல்ஐசி’ என்று, தன்னுடைய படத்தின் தலைப்பை வைத்திருப்பதாகக் கூறி இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கொதித்து எழுந்திருக்கிறார். ’எல்ஐசி’ என்ற தலைப்பை தான் பதிவு செய்து வைத்திருப்பதால் அதை விக்னேஷ் சிவன் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி இருக்கும் எஸ்.எஸ்.குமரன், “மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.