Skip to content

7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் கொடுத்த டைரக்டர் செல்வராகவன்…..

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக  இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி, மனோரமா, மயூரி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி படமும் மாபெரும் வெற்றி பெற்றது. 7ஜி ரெயின்போ காலனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டு அறிவித்தார், இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

7g rainbow colony இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படம் குறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குனர் செல்வராகவன் பேசியுள்ளார். அதில், 7ஜி ரெயின்போ காலனி பாகம் 2 ன் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்பு பணி மட்டுமே உள்ளது. அமைதியாக வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் முதல் பாகத்தைப்போன்று ஹீரோ ஹீரோயினை துரத்தும் படமாக இது இருக்காது. கதிர் கதையைதான் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் எடுக்கப்போகிறேன்.

7g rainbow colony

ஆனால், காலம் மாறிவிட்டது. 10 ஆண்டுகள் கழித்து என்ன என்பது தான் படம். 2ம் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது முதல் பாகத்தின் முடிவுலேயே இருக்கிறது. படங்கள் வெளியிட தேதி கிடைப்பது தீபாவளி, பொங்கலுக்கு தேதி கிடைப்பது போன்று ஆகிவிட்டது. பான் இந்தியா படங்கள், பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் இதுபோன்று சின்ன படங்கள் வெளியிடுவதற்கு போராட வேண்டி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!