ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மலையாள சூப்பர் ஹிட் படமான #மாளிகப்புரம் தமிழில் வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது. மிகுந்த எதிபார்ப்புகுரிய இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சிறப்பு காட்சி நடைப் பெற்றது. முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடை பெற்றது.
இப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது… இந்த மாதிரி படத்திற்கு நான் பாடல் எழுதுவேன் என்று நினைக்கவில்லை. அதற்கு ஐயப்பனின் அருள் தான் காரணம் என்று நினைக்கிறேன். நான் திரைப்பட கல்லூரியில் படிக்கும்போது, என்னுடன் படிக்கும் மாணவனுக்கு மூளையில் கட்டி. இரவு நேரத்தில் நானும், என் நண்பனும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவர் மண்டை வெடிக்கப் போகிறது என்று கூறினார். அவருடைய பெற்றோர்கள் ஊரில் இருக்கிறார்கள். அப்போது, என்னுடைய நண்பன் ஐயப்பனுக்கு வேண்டுதல் வைத்தார். இவனுக்கு சரியாகிவிட்டால், நாங்கள் மூவரும் மாலைபோட்டு சபரிமலைக்கு வருகிறோம் என்று வேண்டினான். அவன் பிழைத்துவிட்டான். இன்றுவரை நன்றாக இருக்கிறான்.அந்த சம்பந்தமோ என்னவோ .. இப்படதிற்கு நான் பாட்டு எழுதும்படியாகி உள்ளது. ஆனால் என்னால்தான் இன்றுவரை சபரிமலைக்கு செல்ல முடியவில்லை.
என்னால் முடிந்த அளவிற்கு பாடல் எழுதியிருக்கிறேன். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக டைட்டில் ரோலில் நடித்த குழந்தை தேவ நந்தாவின் முகபாவனைகள் தான் பாடல் எழுத உந்துதலாக இருந்தது. உன்னி முகுந்தன்
சிறப்பாக நடித்திருக்கிறார். எடுத்த வேலையை கண்ணும் கருத்துமாக பணியாற்றுவதில், தமிழில் வசனம் எழுதிய எனது தம்பி பிரபாகரனுக்கு ஈடாகாது. இப்படத்தை தைரியமாக தயாரித்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துகள்.
இப்போது வரும் பெரிய திரைப்படங்களில் உணர்வு ரீதியாக இயக்குவதில்லை. அந்த வகையில் மாளிகப்புரம் உணர்வுபூர்வமாக இருக்கிறது. பலரும் திரையரங்கிற்கு செல்வதற்கு பயப்படுகிறார்கள். ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் திரைப்படம் ஆரோக்கியமாக இருக்கும். பாரதிராஜா படங்கள், சின்னக் கவுண்டர் போன்ற படங்கள் போல் உணர்வு ரீதியான பல படங்கள் எதிர்காலத்தில் வர வேண்டும்.
சம்பத் ராம் ஐயப்பனுக்கே வில்லனாக நடித்திருக்கிறார், வாழ்த்துக்கள், என்றார். தமிழில் சூர்யா – ஜோதிகா நடித்த #பேரழகன் படத்தை டைரக்ட் செய்த சசி சங்கரின் மகன் விஷ்ணு சசி சங்கர் டைரக்ட் செய்த முதல் படம் இது. அவர் பேசும்போது….. மேடையில் எனக்கு பேசத் தெரியாது. பிரசாத் லேப்-ற்கு வரும்போது எனது தந்தையின் நினைவு வந்தது. முதன்முதலாக என்னுடைய அப்பாவுடன் தான் இங்கு வந்தேன். காதாசிரியர் சொன்னது மாதிரி நானும் எதிர் கடையில் டீ குடித்தேன். இப்பட தயாரிப்பாளர்களான பிரியா வேணு, வேணு குந்தம்பள்ளி அவர்களுக்கு நன்றி. இந்த படம் உன்னி முகுந்தனை நோக்கி பயணிக்கும். அவருக்கு நன்றி. தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரின் ஆசிர்வாதங்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன். தமிழ்நாடு என்னுடைய இரண்டாவது வீடு என்றார்.