காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரில் வசித்து வருகிறார். தற்போது அடுத்த திரைப்பபட பணிகளுக்காக கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.


தேசிய விருதுபெற்ற டைரக்டர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உசிலம்பட்டி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை செய்து வந்தனர்.

இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல்துறையினர் அவைகளை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடர்கள், விருதுக்கான பதக்கங்களை மட்டும் வைத்து கடிதம் எழுதிவிட்டு சென்றுள்ளது உசிலம்பட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.