Skip to content
Home » ஷீட்டிங் ஸ்பாட்டில் இளம் உதவி டைரக்டர் உயிரிழப்பு…. சோகத்தில் சாந்தனு…

ஷீட்டிங் ஸ்பாட்டில் இளம் உதவி டைரக்டர் உயிரிழப்பு…. சோகத்தில் சாந்தனு…

  • by Authour

இளம் டைரக்டர் ராமகிருஷ்ணன் (26) ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது டிவிட்டரில்…. “நேற்று இரவு ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன். உண்மையில் சிறந்த உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன். எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லாத நபர். ஆனால் கடவுள் அவரை அழைத்துக்கொண்டார். பணி செய்துகொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். வாழ்க்கை நிலையில்லாத ஒன்று. அவர் இறப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னாள் அவர் எனக்கு போன் செய்தபோது என்னால் எடுக்க முடியவில்லை; நான் அவர் அழைப்பை எடுத்திருக்கலாம் என நினைக்கும் போது மன வேதனையளிக்கிறது. தயவு செய்து தேவையில்லாத வெறுப்புகளையும் நெகட்டிவிட்டிகளையும் யாரும் பரப்ப வேண்டாம். வாழ்க்கை இருக்கும்வரை மகிழ்ச்சியாகவும், மற்றவர்களை சிரிக்க வைத்தும் வாழ்வோம். மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம்.. மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சிப்போம். இந்த உலகத்தில் இப்போதைக்கு இருக்கும் THE BIGGEST CULPRIT-ஏ மன அழுத்தம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *