Skip to content
Home » ப்ரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் மாரடைப்பால் மரணம்.

ப்ரண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் மாரடைப்பால் மரணம்.

பிரபல மலையாள இயக்குநர் சித்திக். 1989ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘காட்பாதர்’, ‘வியட்நாம் காலனி’, ‘ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார். தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பிரபலம். பின்னர் தமிழில் பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை இயக்கினார். கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார் சித்திக். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் காலமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி மலையாள திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *