Skip to content

ரூ.373 கோடிக்கு டைனோசர் எலும்புக்கூட்டை ஏலம் எடுத்த தொழிலதிபர்

  • by Authour

150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் ஸ்டெகோகொரஸ் வகையை சேர்ந்த டைனோசரஸ் ஒன்றின் எலும்புக் கூடு கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் கொலொரடா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அபெக்ஸ் என பெரியிடப்பட்ட இந்த எலும்புக்கூடானது, 11 அடி (3.3 மீ)உயரமும், 27 அடி நீளமும்( 8.2 மீ) கொண்டது. மொத்தம் 319 எலும்புகள் இருக்கும் என தோராயமாக கணக்கிடப்பட்ட நிலையில், அதில் 254 எலும்புகள் உள்ளன. லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள ‛ சோபி’ என்ற டைனோசர் எலும்புக்கூட்டை விட அபெக்ஸ் 30 சதவீதம் பெரியது இது.
இந்த எலும்புக்கூடு கடந்த 17ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. 6 மில்லியன் டாலர் மட்டுமே ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிட்டடெல்(CITADEL) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன கென் கிரிப்பின் என்பவர் 44.6 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து ஏலத்தில் எடுத்து உள்ளார். ஏலத்தில் எடுத்த டைனோசர் எலும்புக்கூட்டை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு அளிக்க அவர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. போர்ப்ஸ் இதழ் கணிப்பின்படி, இவரின் சொத்து மதிப்பு 37.8 பில்லியன் டாலர் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!