திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி மாலதி. கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு மனைவியின் தலையில் கல்லை போட்டு திருமூர்த்தி படுகொலை செய்தார். இது தொடர்பாக பழனி தாலுகா போலீசார் திருமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது போலீசாரால் அழைத்துவரப்பட்ட திருமூர்த்தி, திடீரென 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த திருமூர்த்தியை உடனடியாக போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திருமூர்த்திக்கு தீவிர சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவம் கோர்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.