பிளஸ்2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 மார்க் பெற்று உள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இப்போது 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி பற்றிய விவரம் தெரியவந்துள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த அந்த மாணவி பெயர் நந்தினி. தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
இவர் அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மார்க் பெற்று மொத்தத்தில் 600க்கு 600 மார்க் பெற்று தமிழ் நாட்டில் புதிய சாதனை ஏற்படுத்தி உள்ளார். நந்தினி படித்த பாடங்கள் விவரம், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேசன். மேற்கண்ட 6 பாடங்களிலும் அவர் தலா 100க்கு 100 எடுத்து உள்ளார். அவரை பள்ளி ஆசிரியைகள் பாராட்டினர். நந்தினி ஆடிட்டராக விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுபோல இதுவரை யாரும் 600க்கு 600 மாா்க் பெற்றதாக தகவல் இல்லை.