Skip to content
Home » திண்டுக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் தீ விபத்து .. 7 பேர் பலி

திண்டுக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் தீ விபத்து .. 7 பேர் பலி

  • by Authour

திண்டுக்கல் நேருஜிநகர் திருச்சி சாலையில், ரெயில்வே மேம்பாலம் அருகே சிட்டி ஆஸ்பத்திரி என்கிற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இது எலும்பு முறிவுக்கான ஆஸ்பத்திரி என்பதால் இங்கு 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். தரைத்தளத்தில் வரவேற்பு அறை, முதல்தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் உள்நோயாளிகள் வார்டு, 3-வது தளத்தில் நோயாளிகள் வார்டு, 4-வது தளத்தில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தங்கும் அறை இருக்கிறது. இந்த ஆஸ்பத்திரியில் நேற்று 45 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். 4 மாடிகளைக் கொண்ட இந்த ஆஸ்பத்திரியில் நேற்று இரவு 9 மணி அளவில் ஆஸ்பத்திரி வரவேற்பு அறையில் திடீரென ‘டமார்’ என்ற சத்தம் கேட்டது. இதனையடுத்து அங்கு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அவர்களுடன் உடனிருந்தவர்கள், மருத்துவ பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரி உள்ளே சிக்கிக் கொண்டனர். லிப்டில் சிறுவன் உள்பட மேலும் சிலர் சிக்கி உயிருக்கு போராடினர். உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் 1 மணிநேரத்திற்கு மேலாக போராடி அவர்களைமீட்டனர். மீட்கப்பட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு மாரியம்மாள் (50), இவரது மகன் மணிமுருகன் (28), தேனியை சேர்ந்த சுருளி (50), அவரது மனைவி சுப்புலட்சுமி (45), திண்டுக்கல் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (40), இவரது மகள் கோபிகா (6)  உள்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்களும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *