திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கென்னடி சாமிதாஸ் (58). இவர் தினகரன் நாளிதழில் சப் எடிட்டராக பணிபுரிந்து வந்தார். கென்னடி நேற்று மதியம் 3 மணியளவில் பணிக்காக திண்டுக்கல் ரோட்டில் உள்ள தினகரன் அலுவலகத்திற்கு தனது மொபட்டில் சென்றார். மெயின்ரோட்டில் இருந்து அலுவலகத்திற்கு கென்னடி திரும்பிய போது திடீரென வேகமாக பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் கென்னடி கீழே விழுந்தார். தலையில் காயம் அடைந்த சப் எடிட்டர் கென்னடிக்கு கருமண்டபம் பகுதியில் உள்ள ஆர்என்ஆர் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் கென்னடியின் உடல்நிலை மோசமானதையடுத்து அவரை வீட்டில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக புத்தூர் சுந்தரம் ஆஸ்பத்திரயில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கென்னடி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கன்டோன்மென்ட் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மறைந்த தினகரன் சப் எடிட்டர் கென்னடி சாமிதாசின் குடும்பத்தாருக்கு etamilnews.com ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
Tags:தினகரன் நாளிதழ்