தமிழக முழுவதும் போதை பொருள்களால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட வாரியாக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் புத்தாம்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் கல்லூரி மாணவ, மாணவிகள் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1500 மாணவ, மாணவிகள் போதைக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சமூக வலைத்தளங்களில் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து 600 மாணவர்கள் டிஜிட்டல் வரைபடங்கள் வரைந்து சமூக
வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக போதைப்பொருள் விழிப்புணர்வுக்கு ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் #karuragainstdrugs #staynotodrugs #karuryouthaction என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து மாணவி கூறுகையில்: போதைப் பழக்கத்திற்கு இளைஞர்கள் அதிகமாக அடிமையாக கொண்டிருக்கின்றனர் இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் ஒன்றிணைந்து தற்போது சமூக வலைதளங்கள் மூலம் பதிவேற்றம் செய்தால் மட்டும் விழிப்புணர்வு மக்களுக்கு கொண்டு சேரும் என்ற நோக்கத்தில் டிஜிட்டல் முறையில் சமூக வலைதளங்களில் போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.