கோவை சரக காவல்துறை டிஐஜி யாக பணியாற்றி வந்த விஜயகுமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்திய காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தன்னை தானே துப்பாக்கால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி ஐ ஜி விஜயகுமாருக்கு இன்று நாகையில் மாவட்ட காவல்துறை சார்பில் மலர் தூவி, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், எஸ்.பி. ஷர்ஷ்சிங், ஏ டி எஸ் பி, சுகுமாரன், டிஎஸ்பி,பாலகிருஷ்ணன், கென்னடி உள்ளிட்ட
நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து டிஐஜி விஜயகுமாரின் திருவுருவ படத்திற்கு, காவலர்கள் அனைவரும் மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.
உயிரிழந்த டி ஐ ஜி விஜயகுமார், 2018-19 ஆம் ஆண்டுகளில் நாகை மாவட்ட எஸ்பி ஆக இருந்தபோது அவர் ஆற்றிய பணிகள் குறித்து அங்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதைப்போல் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் திருக்குவளை கீழ்வேளூர் நாகூர் திட்டச்சேரி திருக்கண்ணபுரம் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அனைத்து காவலர்களும் மரியாதை செலுத்தினர்.