திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரில் கொள்ளை நடந்த தொழிலதிபர் வீட்டில் திருச்சி சரகடிஐஜி சரவண சுந்தர், எஸ் பி சுஜித் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சரவண சுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது…. இந்த வீட்டில் 150 பவுன் நகை மற்றும் 5 லட்சம் கொள்ளை போய் உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்தக் கொள்ளை சம்பவமாக சம்பந்தமா கைரேகை பிரிவு போலீசார் மற்றும் மற்றும் மோப்ப நாய் கொண்டு கொள்ளையர்களை பிடிக்கம் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக திருவெறும்பூர்இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், பெல்லி இன்ஸ்பெக்டர் கமலவேணி, துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் இரவு நேரத்தில் ரோந்து பணியில் கண்காணிப்பார்கள் அதை பொதுமக்கள் உணர்ந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கு முன்பு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.