Skip to content

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு தமன்னா முற்றுப்புள்ளி..?

நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வந்த நிலையில், இவர்களுடைய விஷயம் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அதன்பிறகு இருவரும் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் சீரிஸில் நடித்து கொண்டிருந்தபோது நெருக்கமான காட்சிகள் வெளிவந்த நிலையில், இருவரும் டேட்டிங் செய்வது உறுதி என இணையவாசிகள் பேசத்தொடங்கிவிட்டார்கள். உடனடியாக தமன்னாவும் அதிகாரப்பூர்வமாகவே விஜய் வர்மாவை காதலிப்பதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து இருவரும் இந்த ஆண்டு பிரமாண்டமாக திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தீயான ஒரு தகவல் காட்டு தீ போல பரவியது. அதன் பிறகு பரபரப்பை கிளப்பும் வகையில் சமீப காலமாக தமன்னாவும், விஜய் வர்மாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவலுக்கு மத்தியில் இருவரும் ஆரம்ப காலத்தை போல ஒற்றுமையாக எங்கும் செல்லவில்லை என்பதால் ஒரு வேலை இந்த தகவல் உண்மை தானோ என்கிற கோணத்தில் இணையவாசிகள் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

இந்த சூழலில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமன்னா விஜய் வர்மாவின் கோட் சூட் அணிந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. சமீபத்தில் தமன்னா ராஷா ததானியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டபோது, வெள்ளை நிற கோர்ட் ஒன்றை அணிந்துகொண்டு வருகை தந்திருந்தார். எனவே, இதற்கான புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்களும் இது விஜய் வர்மா கோட் சூட் தானே என கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.

ஏனென்றால், நவம்பர் 2023 இல் ஜியோ வேர்ல்ட் பிளாசாவின் பிரமாண்ட திறப்பு விழாவில் தமன்னாவுடன் விஜய் வர்மா இதேபோலவே ஒரு கோட் சூட் அணிந்து வருகை தந்திருந்தார். எனவே, இப்போது அதைப்போலவே தமன்னா போட்டு வந்திருக்கும் நிலையில் இப்படியான தகவல் பரவி வருகிறது. அந்த கோட் உண்மையில் விஜய்க்கு சொந்தமானதா என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை இருப்பினும் வதந்திகளுக்கு மத்தியில் அவர் அதற்கு பதில் அளிக்கும் விதமாக இப்படியான ட்ரஸை போட்டு வந்திருக்கலாம் எனவும் பேசி வருகிறார்கள். உண்மையில் இதற்கு பதில் வேண்டும் என்றால் இருவரும் இது குறித்து விளக்கம் அளித்தால் மட்டும் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!