Skip to content

தல தோனியின் நியூ லுக்.. மாஸான ஹேர் ஸ்டைல்…

  • by Authour

இந்திய கிரிக்கெட்டில் மிகத் தாக்கம் நிறைந்த வீரர் என்றால் சில காலங்களுக்கு முன்பு வரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என கபில்தேவ் முன்னணியில் இருந்தார்.

ஆனால் தற்காலத்தில் பேட்டிங், கீப்பிங், கேப்டன்சி, பினிஷிங் என நான்கு துறைகளில் மிகவும் தாக்கத்தை தரக்கூடிய வீரராக மகேந்திர சிங் தோனிதான் முன்னணியில் இருக்கிறார் .. 

சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுடைய புகழ் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். இதற்கு எந்த வீரர்களும் விதிவிலக்காக இருந்தது கிடையாது.

ஆனால் உலக கிரிக்கெட் மகேந்திர சிங் தோனிக்கு மட்டும்தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் புகழ் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

40 வயதை தாண்டிய அவர் கேப்டனாக ஐபிஎல் தொடரில் இந்த வருடம் கோப்பையை வென்று அசத்தியிருக்கிறார். மேலும் அடுத்த வருடமும் ஐபிஎல் விளையாட தயாராக இருக்கிறார்.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி நீண்ட தலை முடியுடன் ஆரம்ப காலத்தில் வந்தது போல தன்னுடைய கடைசி வருட கிரிக்கெட் விளையாட்டின் காலத்திலும் ரசிகர்களுக்காக வருகை தர இருக்கிறார் என்கின்ற செய்தி தற்பொழுது வந்திருக்கிறது. மேலும் கொரோனா காலத்தில் மகேந்திர சிங் தோனியின் புகைப்படத்தை கேலி செய்தவர்களுக்கு, தற்பொழுது வெளியாகி இருக்கும் புகைப்படம் ஆச்சரியமான பதிலடி தந்திருக்கிறது என்றே கூறலாம்.

மகேந்திர சிங் தோனியின் சிகை அலங்கார நிபுணர் கூறும் பொழுது…
“மகேந்திர சிங் தோனி உடன் பழகுவதற்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாகும். மேலும் என்னுடைய சிகை அலங்கார திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பிற்கு பெருமை கொள்ளக் கூடியவனாகவும் நன்றி உடையவனாகவும் இருக்கிறேன். கடந்த ஐபிஎல் தொடரின் போது எல்லோரும் தலைமுடியை மிகவும் சிறியதாக

வெட்டி கொண்டு இருந்த பொழுது, அந்த நேரத்தில் மகி பாய் என்னிடம் ஒரு புகைப்படத்தை காட்டினார். அது நீண்ட தலைமுடியுடன் அவர் இருக்கும், அவரது ரசிகர்கள் உருவாக்கிய புகைப்படமாகும்.

நான் அந்த புகைப்படத்தை பார்த்து மயங்கி அவரை தலைமுடியை வளர்க்கச் சொன்னேன். அவரது தலைமுடியை வெட்டக்கூடாது வளர்க்க வேண்டும் என்று இருவரும் முடிவெடுத்தோம். வளர்ந்த பிறகு வெட்டி ஸ்டைல் செய்து கொள்ளலாம் என்று நினைத்தோம்.

மகி பாயின் நீண்ட தலை முடி சிகை அலங்காரத்திற்கு நான் ரசிகனாக இருந்தேன். முடிக்கு புதிய அமைப்பையும் வண்ணத்தையும் கொடுக்க நாங்கள் விரும்பினோம். அவருடைய இந்த சிகை அலங்காரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, நான் ரசிக்கிறேன்!” என்று கூறி இருக்கிறார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!