ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பில்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே மழையின் காரணமாக ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. பின்னர் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று அறிவித்த நிலையில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்று நிலை ஏற்பட்டது. ஐந்தாவது பந்தை ஜடேஜா சிக்ஸர் ஆக மாற்றினார் . இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் கடைசி பந்தை பவுண்டரியாக்கி வெற்றியை சிஎஸ்கே வசப்படுத்தினார். இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது எம்.எஸ்.தோனிக்காக மட்டும் தான் என ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தோனியோடு கோப்பையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நாங்கள் இதை தோனிக்காக தான் செய்தோம். தோனிக்காக மட்டும் தான் செய்தோம் என கூறியுள்ளார். ஜடேஜாவின் இந்த டுவீட் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.